15.02.2026 அன்று மகா சிவராத்திரி பூஜை மாலை நேரத்தில் நான்கு கால பூஜைகளாக சிறப்புடன் நடைபெற உள்ளது. முதல் கால பூஜை மாலை 7.00 மணிக்கும், இரண்டாம் கால பூஜை இரவு 12.00 மணிக்கும், மூன்றாம் கால பூஜை அதிகாலை 3.00 மணிக்கும், நான்காம் கால பூஜை அதிகாலை 5.00 மணிக்கும் நடைபெறும். ஒவ்வொரு காலத்திலும் அலங்காரம், அபிஷேகம் மற்றும் அன்னதானம் இடம்பெறும். அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளைப் பெற அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.